10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

School-Education 2021 07 21 0

Source: provided

சென்னை: தமிழத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்வித் தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில், வாட்ஸ்ஆப் மூலமாக மாதம்தோறும் அலகு தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள், மாணவர்களுக்கென தனி வாட்ஸ் அப் குழுக்கள் அமைப்பது, மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவியருக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் குழுவில் வினாத்தாள்களை அனுப்பி மாணவர்கள், வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனித்தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை பி.டி.எப்., (PDF) ஆக மாற்றி அனுப்ப வேண்டும். விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் இடம்பெற வேண்டும். ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்குவார்கள். அலகு தேர்வு நடத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பீடு செய்ய இத்திட்டம் உதவியாக இருக்கும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து