முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான தொடர்: முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான ' இங்கிலாந்து அணி ' அறிவிப்பு

புதன்கிழமை, 21 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன்: 5 போட்டிகள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான 'இங்கிலாந்து அணி' தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக. 4-ல் தொடக்கம்...

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான 17 பேர் அடங்கிய அணியை மட்டும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

மீண்டும் அணிக்கு...

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஆலி ராபின்சன் உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளனர். இதன்மூலம், பலம்வாய்ந்த அணியாக இங்கிலாந்து களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணி:

ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், டாம் பெஸ், ஸ்டுவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸாக் கிராலே,  சாம் கரன், ஹசீப் ஹமீத், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், டாம் சிப்லே, பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து