முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் 'குதிரையேற்றம் - கோல்ப்': இந்திய வீரர் - வீராங்கனைகள் விவரம்

புதன்கிழமை, 21 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்றம், கோல்ப் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் விவரம் வெளியாகியுள்ளது.

பவுத் மிர்சா ..

பவுத் மிர்சா - குதிரையேற்ற வீர‌ரான இவருக்கு வயது 29. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1992-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. உலக அரங்கில் குதிரையேற்றத்தில் பவுத் மிர்சா பிடித்துள்ள இடம் 78.

அனிர்பன் லஹிரி 

குழிப்பந்தாட்ட (கோல்ப் )வீர‌ரான இவருக்கு வயது 34. புனேவில் 1987-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவர், உலக அரங்கில் 348 வது இடத்தில் உள்ளார்.

உதயன் மனே 

குழிப்பந்தாட்டவீர‌ரான இவருக்கு வயது 30. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1991-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24- ம் தேதி பிறந்தவர். உலக தர வரிசையில் தற்போது 360 வது இடத்தில் உள்ளார்.

அதிதி அசோக் 

குழிப்பந்தாட்ட வீராங்கனையான இவருக்கு வயது 23 . கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1998-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி பிறந்தவர். உலக தர வரிசையில் 178 வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து