சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்

dhamu-08

Source: provided

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகே உள்ள 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் 3-வது மாடியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், எழும்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து 4 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், ராட்சதக் கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.  இந்தக் கட்டிடத்தில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து