பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் ஆக. 5 வரை நீட்டிப்பு

dhamu-11 1

Source: provided

சென்னை: சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 5 வரை நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வரும் இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார்.

சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இவர் மீது 3 போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு போக்சோ வழக்கில் மட்டும் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டாவது போக்சோ வழக்கில் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார்  அவரை கைது செய்தனர்.

எனவே புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து