முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கை குறைந்தது

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருமலை: கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை 94 சதவீதம் குறைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். 

இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஆண்டுக்கு ரூ.1,300 கோடி தேவஸ்தானத்திற்கு கிடைக்கிறது. இதேபோல் வெளிநாட்டு பக்தர்களும் கரன்சி நோட்டுகளை உண்டியலில் செலுத்துகின்றனர்.

அவ்வாறு கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை 157 வெளிநாடுகளை சேர்ந்த கரன்சி நோட்டுகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தினர். மலேசியா கரன்சி நோட்டுகள் 46 சதவீதம், அமெரிக்க டாலர் 16 சதவீதம், இலங்கை 11, சவுதி 6, கத்தார் 4, நேபால் 3 சதவீதம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

ஏழுமலையான் கோயிலுக்கு 2019-2020-ம் ஆண்டில் வெளிநாட்டு கரன்சி மூலமாக ரூ.27.49 கோடி வருவாய் வந்தது. ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பக்தர்கள் யாரும் வராத நிலையில் உண்டியல் கரன்சி நோட்டுகள் எண்ணிக்கை 94 சதவீதம் குறைந்துள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் 17 ஆயிரத்து 310 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 37 பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.1.89 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து