முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தலைவர்கள் 14 பேரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் 14 பேரின் செல்போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் உலக தலைவர்கள் பலரின் தொலைபேசி எண்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈராக் அதிபர் பர்ஹம் சாலி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென் ஆப்பரிக்க அதிபர் சிரில் ரமபோசா, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானம்,  உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மொத்தமாக தற்போது ஆட்சியில் இருக்கும் 3 அதிபர்கள், 3 பிரதமர்களின் பெயர்களும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த 7 முன்னாள் ஆட்சியாளர்களின் செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சொந்தமான 2 எண்கள் பட்டியலில் இருந்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் செல்போன் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக அந்த நாடு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. குற்றம் உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பலர் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் அந்த புகார்களின் மீது விசாரணை தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து