இலங்கைக்கு எதிரான எனது ஆட்டத்திற்கு டோனி மிகப் பெரிய காரணம்: தீபக் சஹார்

Dhoni-Chahar-22-07-2021

Source: provided

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் ஆட்டங்கள் மிகப் பெரிய காரணம் என தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

அணியின் வெற்றிக்கு...

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், தீபக் சஹார் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அப்போதே சென்னை சூப்பர் கிங்ஸின் டோனியிடம் இருந்த தாக்கமே சஹாரின் இந்த ஆட்டம் என பாராட்டப்பட்டது.

கவனிக்கிறேன்...

இந்த நிலையில் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதை உறுதி செய்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது., "ஆட்டங்களை எம்எஸ் டோனி முடிக்கும் விதத்தைப் பார்ப்பது மிகப் பெரிய காரணம். நீண்ட நாள்களாக நான் அவரை கவனித்து வருகிறேன். அவர் இன்னிங்ஸை முடிப்பதையே எப்போதும் பார்த்திருக்கிறேன். 

அறிவுறுத்துவார்... 

அவரிடம் பேசும்போது எப்போதுமே ஆட்டத்தை முடிந்தவரை கடைசி வரை எடுத்துச் செல்ல அறிவுறுத்துவார். அனைவருக்கும் வெற்றி பெற வேண்டும். ஆனால், ஆட்டம் கடைசி வரை செல்லும்போது அனைவரும் செயலாற்றுவது விறுவிறுப்பாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து