முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திபெத்திற்கு சென்றுள்ள ஜி ஜின்பிங்

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லாசா: சீனாவின் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திபெத்திற்கு ஜி ஜின்பிங் சென்றுள்ளார்.

சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 2011 ஆம் ஆண்டு சீனாவின் துணை அதிபராக இருந்த போது திபெத் பகுதிக்கு சென்றார். அதன் பிறகு சீனாவின் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தற்போது திபெத்திற்கு அவர் சென்றுள்ளார். 

பல ஆண்டுகளாக சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக திபெத் இருந்து வருகிறது. சுயாட்சி கொண்ட பகுதியாக திபெத் அரசு அறிவித்துக் கொண்டாலும், அங்கு சீனா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தொன்மையான மௌத்த மத வரலாற்றை கொண்டிருக்கும் திபெத் நாட்டை, சீனா கலாச்சாரம் மற்றும் மத ரீதியாக ஒடுக்கி வருவதாகவும் திபெத்தியர்கள் சார்ப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. 

இது மட்டுமல்லாது திபெத் நாட்டுடனான இந்திய எல்லைப்பகுதிகளில் சமீப காலமாக இந்திய-சீன ராணுவத்தினர் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிபர் ஜின்பிங் திபெத்திற்கு வருகை தந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து