முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமயம் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா நேரில் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை: திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆஜரானார். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு மேடை அமைப்பதில் ஏற்பட்ட சா்ச்சையில் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமா்சித்துப் பேசியதாக ஹெச்.ராஜா மீது திருமயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் நேரில் ஆஜராகி அவா் மன்னிப்பு கோரினாா்.

இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு, இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜூலை 23-ம் தேதி ஹெச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி நேற்று திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆஜரானார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து