முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 35 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 483 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிகாக 35 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 93 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் கடந்த 24 மணி நேரத்தில் 3,881 பேர் குறைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 4 லட்சத்து 68 ஆயிரத்து 79 பேர் வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.36 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 483 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 19 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16 லட்சத்து 68 ஆயிரத்து 561 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 45 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 545 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 42.34 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து