முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 - வது ' ஒலிம்பிக் திருவிழா ' கோலாகலமாக தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் திருவிழா நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வண்ணமயமான வானவேடிக்கை மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. 

கோலாகல தொடக்கம்...

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நேற்று டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. மேடைக்கு ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாக் வருகை தந்தார். டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க்கவிழாவில்  சிறப்பு விருந்தினராக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன்,  பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாணவேடிக்கைகள்...

ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கியது.  கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டமாக விழா நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகள்...

ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கியது. ஒலிம்பிக் தொடக்க விழாவில் 950 பார்வையாளர்கள் மட்டும் பங்கேற்றனர். முதலிலில் ஜப்பானின் தேசிய கீதம் படப்பட்டது.  இது ஜப்பானின் தற்காப்பு கலைஞர்கள் பாடினார்கள்.  

204 நாட்டு அணியினர்...

விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுன் மிடுக்காக அணிவகுத்து செல்ல தொடங்கினர். அணி வகுப்பில் ஜப்பானிய தேசியக் கொடி முதலில்  கொண்டு வரப்பட்டது. 

இந்தியா தரப்பில்.... 

ஒலிம்பிக் தொடக்க விழா வீரர்கள் அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு செல்கிறது.  கொரோனா கட்டுப்பாடு காரணமாக தொடக்க விழாவில் இந்திய தரப்பில் 6 அதிகாரிகள், 19 வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணியைச் சேர்ந்த வில்வித்தை வீரர்-வீராங்கனைகள், துப்பாக்கி சுடும் வீரர்கள், ஷட்லர்கள் மற்றும் ஹாக்கி வீரர்கள் (மன்பிரீத் தவிர) கலந்து கொள்ளவில்லை

339 தங்க பதக்கம்...

இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள். இந்தியாவில் இருந்து 18 விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 120 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். 

ரசிகர்கள் இல்லை...

வழக்கமாக ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மைதானமே அதிரும். ஆனால் கொரோனா மிரட்டலால் இந்த தடவை ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 68 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் சுமார் 1000 மிக முக்கிய பிரமுகர்கள் விழாவை கண்டுகளிக்கின்றனர். நேற்று தொடங்கி அடுத்த 17 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் விளையாட்டு திருவிழாவை காண ஒட்டமொத்த உலகமும் டோக்கியோ நோக்கியே இருக்கும்.

BOX - 1

தேசியக் கொடியை ஏந்திய

மேரிகோம், மன்பிரீத் சிங் !

நாடுகள் அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு சென்றது. அதன்பின்னர் அகரவரிசைப்படி மற்ற நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர். குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து