முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள்: இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல்-அவுட்

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு: இந்தியா - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. பின் போட்டி தொடர்ந்து நடைபெற்றது. அதில் இந்திய அணி 225 ரன்களுகக்ு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்தியா வெற்றி...

இலங்கைக்கு சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்தியா பேட்டிங்...

இந்த நிலையில் இந்தியா-இலங்கை மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.  இதன்படி,  இலங்கை அணி முதலில் பந்து வீசுகிறது. இந்திய அணியில்   சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, சேதன் சகாரியா, கவுதம், ராகுல் சஹார் ஆகிய 5 பேரும் சர்வதேச போட்டியில் அறிமுகமாகினர்.

தவான் அவுட்...

இந்திய அணி சார்பில் ஷிகர் தவான், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் விளாசி அதிரடி காட்டிய தவான் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர், பிரித்வி ஷா உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். 

மழை குறுக்கீடு...

இருவரும் பவுண்டரிகளாக அடித்தனர். அதனால், இந்திய அணியின் ஸ்கோர் 6 ரன் ரேட் என்ற அளவிலேயே சென்றது. இருப்பினும், பிரித்வி ஷா 49, சாம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்து இருவரும் அரைசதத்தை தவறவிட்டனர்.23 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை இந்தியா எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் போட்டி தொடர்ந்து நடைபெற்றது. இதில் இந்திய அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது.

யாதவ் - பாண்டே...

சூர்ய குமார் யாதவ் 22(17), மணிஷ் பாண்டே 10 (15) ரன்களுடன் களத்தில் உள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இந்தியா 2 - 0 என கைபற்றியுள்ளது. தற்போது மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து