முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து மத கடவுள் - பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக குமரி மாவட்ட பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நாகர்கோவில்: இந்து மத கடவுள் மற்றும் பிரதமர் மோடியை அவதூறாக பேசிய குமரி மாவட்ட பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா நேற்று மதுரையில் கைது செய்யப்பட்டார். 

குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர், இந்து மத கடவுள்களையும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக அமைச்சர்களையும் அவதூறாக பேசினார். மேலும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. பற்றியும் அவதூறு கருத்துக்களைதெரிவித்தார். அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அவரது பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியினர், இந்து அமைப்பினர் மற்றும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குழித்துறை மறை மாவட்ட ஆயரும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்பட மேலும் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜார்ஜ் பொன்னையா உள்பட 3 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை  சிலைமான் போலீசார் கருப்பாயூரணி பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சிவகங்கையில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் போலீசாரால் தேடப்படும் பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா என்பது தெரிய வந்தது.  இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து திருமங்கலம் அருகே உள்ள  கள்ளிக்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை  நடத்தினார்கள். பின்னர் அவர் கோவில்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையிலான போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பங்கு தந்தை ஜார்ஜ பொன்னையாவிடம் நெல்லை சரக டி.ஐ.ஜி. மற்றும் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாரத மாதா, தலைவர்களை விமர்சித்த வழக்கில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து