முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி 2-வது சனிக்கிழமை: திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் நேற்று ஆடி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். சனிப்பெயர்ச்சி நடைபெறும் போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆடி மாதம் 2-வது சனிக்கிழமையான நேற்று அதிகாலை முதல் புதுச்சேரி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.

பல மாதங்களுக்குப் பிறகு திருநள்ளாறு கோயிலுக்கு நேற்று  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.  அதனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன.  நேற்று முன்தினம் நள்ளிரவு முதலாகவே சாலையில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என இரண்டு வகையான தரிசனத்திற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரசின் கட்டுப்பாடு காரணமாக சனீஸ்வர தீர்த்த குளமான நளன் தீர்த்தத்தில் பொதுமக்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் சனீஸ்வர பகவானுக்கு நடந்த பல்வேறு சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து