முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம்: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

திங்கட்கிழமை, 26 ஜூலை 2021      அரசியல்
Image Unavailable

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம் என அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ். பேட்டியளித்தார். மேலும் தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தியுள்ளோம் எனவும் கூறினார்.

 டெல்லியில் பிரதமரை ஓ.பி.எஸ். உடன் சென்று சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளிக்கயில் இவ்வாறு கூறினார்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று முன் தினம் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். நேற்று காலை 11 மணியளவில் டெல்லியில் பிரதமர் மோடியை இருவரும் சந்தித்துப்பேசினர்.

இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் அ.தி.மு.க.வில் எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை. சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம்.  தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து