அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவு

Nithyanand-Roy 2021 07 27

Source: provided

புதுடெல்லி : அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி .கேமரா பொருத்தும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலின் விவரம் வருமாறு:

சுப்ரீம் கோர்ட் கடந்த ஏப்ரல் 6 அன்று பிறப்பித்த உத்தரவில் அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த மத்திய உளவு அமைப்புகள் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. அதன்படி மத்திய உளவு அமைப்புகளும் மாநில அரசுகளிடம் நிதி கோரியது. அதேபோல் இவ்விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. பொருத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட்டிடம் நேரடியாகவே தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

காவல்துறை மாநிலப் பட்டியலில் இருப்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை காவல் நிலையங்கள் இருக்கும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கே தெரியுமென்பதால் இது தொடர்பாக ஜூலை 8-ம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தும் பணியை 2022-க்குள் நிறைவு செய்யும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து