ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்திய அணிக்கு 2-வது வெற்றி

Indian-Hockey-Win 2021 07 2

Source: provided

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் தன்னுடைய 3-வது ஆட்டத்தில் ஸ்பெயினை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இந்தியா தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

ஆஸி.யிடம் தோல்வி...

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் அணிக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த ஒலிம்பிக்கின் முதல் போட்டியில் நெதர்லாந்தை வென்ற இந்தியா, தன்னுடைய 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 5-வது நாளான நேற்று லீக் சுற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை சந்தித்தது. இது இந்திய அணியின் 3-வது போட்டி.

இந்தியா ஆதிக்கம்...

இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த இந்திய அணி முதல் பாதியில் இரண்டு கோல்களை போட்டு அசத்தியது. அதில் ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் சிங் முதல் கோலை பதிவு செய்தார். பின்பு, 15 ஆவது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங் 2-வது கோலை அடித்தார். அதன் பின்பு ஸ்பெயினின் கோல் போடும் முயற்சிகளை இந்திய வீரர்கள் தொடர்ந்து தடுத்த வந்தனர்.

பெனால்டி கார்னர்... 

இதனையடுத்து ஆட்டத்தின் 2-வது பாதியின் 51-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை சாதகமாக்கிய ருபிந்தர் சிங் 3-வது கோலை அசத்தலாக பதிவு செய்தார். 2-வது பாதி முழுவதும் ஸ்பெயினால் கோல் அடிக்க முடியாததால், இந்தியா 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து