நான் மீண்டும் ஆட்சியில் அமருவேன்: குமாரசாமி

Kumaraswamy 2021 07 21

Source: provided

ராமநகர் : நான் 2 முறையும் அதிர்ஷ்டத்தால் தான் முதல்வரானேன். சாமுண்டீஸ்வரி ஆசி இருக்கும் வரை நான் மக்கள் பணியாற்றுவேன். மீண்டும் நான் ஆட்சியில் அமருவேன் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ராமநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 

எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்வராக இருந்த போது கொரோனாவால் இறந்த பி.பி.எல். குடும்பங்களை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு இதுவரை அரசாணை பிறப்பிக்கவில்லை. எடியூரப்பா பதவி விலகியதால் எங்கள் கட்சிக்கு லாபமா? என்பது குறித்து பேச விரும்பவில்லை.

வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய அரசு இல்லை. இது கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு மேலும் அடி விழுவது போல் உள்ளது. நான் 2 முறையும் அதிர்ஷ்டத்தால் தான் முதல்வரானேன்.  நான் நல்ல பணிகளை மேற்கொண்டேன். சாமுண்டீஸ்வரி ஆசி இருக்கும் வரை நான் மக்கள் பணியாற்றுவேன். மீண்டும் நான் ஆட்சியில் அமருவேன்.  இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து