டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியல்: முதலிடத்திற்கு முன்னேறிய ' ஜப்பான் '

Japan-Medal 2021 07 28

Source: provided

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த ஜப்பான் நேற்று 11 தங்கப் பதக்கம் உள்ளிட்ட மொத்தம் 20 பதக்கங்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆரம்பத்தில் சீனா...

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து உள்ளது.

அமெரிக்கா முதலிடம்...

நேற்று முன்தினம் மாலை 6  மணி  நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 22 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருந்தது. சீனா  தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 7 என மொத்தம் 21 பதக்கங்களுடன் 2வது  இடத்தில் இருந்தது

தற்போது ஜப்பான்...

ஜப்பான் தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 3 என மொத்தம் 17 பதக்கங்களுடன்  3 வது இடத்தில்  இருந்தது.ரஷியா 5 தங்கம், வெள்ளி 7 வெண்கலம் 4 மொத்தம் 16 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் நேற்று டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் போட்டியை நடத்தும் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான்  11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. 

41-வது இடத்தில்...

ஜப்பானைத் தொடர்ந்து, 10 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. 10 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்துடன், பதக்கப் பட்டியலில் இந்தியா 41-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து