முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோ, டாக்சி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது; உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

வியாழக்கிழமை, 29 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : ஆட்டோ, டாக்சி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றுஉயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் விதிகளை பின்பற்ற கோரி ஜாகிர் உசேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.  அதில், மீட்டர் வைக்காத ஆட்டோக்களுக்கு தகுதி சான்று வழங்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆட்டோ, டாக்சி பயணிகளிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆட்டோ, டாக்சியில் கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரையில் கட்டண மீட்டர் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகள் போலவும், மினி பேருந்துகள், பேருந்துகளை போலவும் இயக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.  ஆட்டோ மற்றும் கார்களில் அதிக ஆட்களை ஏற்றுவதை கடுமையானதாக கருதி அதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசு பதில் அளிக்க கோரி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

ஆட்டோ, டாக்சியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று ஆர்.டி.ஓ.க்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து