முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் - 6-வது நாள் வாய்ப்பை இழந்தார் மேரிகோம்

வியாழக்கிழமை, 29 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில்  மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா மோதினர். இதில் முதல் சுற்றில்  1-4 என்ற கணக்கில் மேரி கோம் தோற்றார். 2-வது சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் மேரி கோம்  வெற்றி பெற்றார்.

3-வது சுற்றில் வலென்சியா வெற்றியாளராகவும், மேரி கோம் நாக் அவுட் ஆகவும் அறிவிக்கப்பட்டார். வலென்சியாவுக்கு எதிராக தனது 16 சுற்றுகளை இழந்து 2-3 கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார்.

_____________

உலக சாம்பியன் வெளியேற்றம்

இரண்டு முறை உலக துருவ  போல்ட் வால்ட் சாம்பியன் சாம் கென்ட்ரிக்ஸ்  கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து  வெளியேற்றப்பட்டார் என்று அமெரிக்காவின் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியது. இது குறித்து அமெரிக்கா ஒலிம்பிக் கமிட்டி கூறியதாவது.,

சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு உறுதியானது குறித்து  நாங்கள் வருத்தப்படுகிறோம். டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட மாட்டார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற  கென்ட்ரிக்ஸ்  இப்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என கூறி உள்ளது. 2017 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கென்ட்ரிக்ஸ் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில்  முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

____________

குத்துச்சண்டை வீரர்கள் அபாரம்

குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். இது அவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டியாகும். இவர் அல்ஜீரியாவின் இச்ரக் சாயிப்பை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தினார் பூஜா. இரு முறை ஆசிய சாம்பியனான பூஜா ராணி, தனது காலிறுதியில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரும், இரு முறை ஆசிய சாம்பியனும், 2018 உலக சாம்பியனுமான சீனாவின் லீ கியாங்கை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறார். 

குத்துச்சண்டையில் மகளிருக்கான 69 கிலோ பிரிவில் இந்தியாவின் 23 வயது லோவ்லினா போகோஹெயின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் ஜெர்மனிய வீராங்கனை நாடினே அபெட்ஸை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். அரையிறுதிக்குத் தகுதி பெறும் அனைவருக்கும் பதக்கம் உறுதி என்பதால் காலிறுதியில் லோவ்லினாவின் வெற்றியை இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

ஹெவிவெயிட் பிரிவில் (+ 91 கிலோ) இந்தியாவின் 32 வயது சதீஷ் குமார், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் ஜமைக்காவின் ரிகார்டோ பிரெளனை 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.  காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் பகோடிர் ஜலோலோவை எதிர்கொள்கிறார் சதீஷ் குமார். பகோடிர், நடப்பு உலக சாம்பியன் என்பதால் அரையிறுதிக்கு சதீஷ் குமார் தகுதி பெறுவது சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

____________

மின்னும் ஒலிம்பிக் நகரம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள டோக்கியோ நகரத்தின் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது. இரவு நேரத்தில் விளக்குகளால் ஒளிரும் டோக்கியோ நகரத்தின் இந்தப் புகைப்படத்தை நாசா நிறுவனம் புதன்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கருத்துப் பதிவிட்டுள்ள விண்வெளி வீரர் கிம்பிரோ, “வணக்கம் டோக்கியோ. நேற்றைய இரவு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நாங்கள் பார்த்தோம். பல நாடுகள் தங்கத்திற்காகப் போராடினாலும் 250 மைல்களுக்கு அப்பால் இருக்கும் எங்களுக்கு நாம் அனைவரும் ஒரே அணியினர் தான்” எனப் பதிவிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

________

தங்கம் வென்றால் ரூ.3 கோடி 

டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட வீரர்களில் 25 பேர் ரயில்வே துறை ஊழியர்கள். போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் 20 சதவீதம் பேர் ரயில்வேயில் இருப்பதால் அவர்கள்  போட்டியில் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அளித்த தகவலில் " விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் ரயில்வே துறையைச் சார்ந்தவர்கள் தங்கம் வென்றால் 3 கோடியும் , வெள்ளி வென்றால் 2 கோடி, வெண்கலத்திற்கு 1 கோடி என்கிற அளவில் பரிசுத்தொகையை அளிக்க இருக்கிறோம். மேலும் இறுதிச்சசுற்று வரை செல்லும் வீரர்களுக்கு 35 லட்சம் ரூபாயும் , போட்டியில் கலந்து கொண்டாலே 7.5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும்  தங்கப்பதக்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு 25 லட்சம் ரூபாயும் , வெள்ளிப்பதக்கம் வென்றவரின் பயிற்சியாளருக்கு 20 லட்சம் மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றவரின் பயிற்சியாளருக்கு 15 லட்சமும் பரிசுத்தொகையாக  வழங்கப்படும் " என  இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது .

 

___________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து