முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் 100 டாலர் வெகுமதி: அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

ஒரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் 100 டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டெல்டா வகை கொரோனா உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள் முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில், தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருபவர்களுக்கு 100 டாலர்கள் வழங்க அந்தந்த மாகாண அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  

வெள்ளை மாளிகையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீப காலத்தில், பலர் பலியாகி வருகின்றனர் அல்லது தங்களின் மனதுக்கு பிடித்தவர்கள் இறப்பதை காண்கின்றனர். பொறுப்பு என்பது தனி மனித சுதந்திரத்துடன் வருவது. எனவே, பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். உங்களின் நாட்டுக்காகவும் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்காகவும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.  மொத்தமுள்ள 330 மில்லியன் மக்களில் 163.8 மில்லியன் பேர்தான் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பயணம் செய்யும் போது அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த முன்வருபவர்களுக்கு 100 டாலர்கள் வெகுமதி அளிக்கப்படும். இதற்கு, கொரோனா உதவி தொகையிலிருந்து 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது  என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து