முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குநரான விஜய் ஆண்டனி

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

இசை அமைப்பாளராக, பல வெற்றிகளை கொடுத்தவர். ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சாதனை படைத்தவர்,  தற்போது கோலிவுட்டில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.  தனது பிறந்தநாளில் தன்னுடைய Vijay Antony Film Corporation நிறுவனம் மூலம்,  தயாரிக்கப்படும்  "பிச்சைக்கரன் 2"  திரைப்படத்தை இயக்குவது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர்  பகிர்ந்து கொண்டதாவது... 

ஒரு நீண்டகால கனவு இறுதியாக நனவாகிறது.  இந்த புதிய அவதாரம் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.  நீண்ட காலமாக எனது மனதில் இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது. ஒரு நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும், நான் உதவி இயக்குநராகவும்  பணியாற்றியுள்ளேன், பல்வேறு திரைப்பட இயக்குநர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும்  துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது  நன்மை தரும் அம்சமாகும்.   இசையமைப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இத்துறையில் சிறந்ததொரு  வெற்றியைப் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம்.

எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும், இந்த திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நான்  இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். மிகப்பெரும் பட்ஜெட்டில் ஒரு பிரமாண்டமான படைப்பாக  இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகைகளுடன்  பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. 

ரசிகர்களுக்கு செண்டிமென்டும்,  பொழுதுபோக்கும்,  சரி விகிதத்தில் கலந்த சிறப்பானதொரு அனுபவத்தை "பிச்சைக்கரன் 2" திரைப்படம் தரும். இப்படத்தில்   நடிக்கவுள்ள  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து