முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமுத்திரகனி-யோகிபாபு இணையும் யாவரும் வல்லவரே.

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

N.A.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில்  “யாவரும் வல்லவரே"   என்ற படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இணைந்து நடிக்கிறார்கள். 11:11 Production சார்பில் Dr. பிரபு திலக் இது குறித்து  கூறியதாவது... 

"வால்டர், பாரிஸ் ஜெயராஜ்"  படங்களுக்கு பிறகு, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பார்டர்"  படத்தின் முன் வெளியீட்டு பணிகளுக்கு, ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த உற்சாக தருணத்தில் எங்களின் அடுத்த படைப்பாக  “யாவரும் வல்லவரே" படத்தை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்,

மேலும், ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது என்றார். சமுத்திரகனி மற்றும் யோகி பாபுவுடன்  ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவராசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நாதகுமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர். இசை N.R.  ரகுநந்தன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து