முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிலீஸுக்கு தயாரான அரண்மனை-3

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில்,  தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க,  அரண்மனை 3  படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.  ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத்,  மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மறைந்த நடிகர் விவேக்  இப்படத்தில் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி யுடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது.

படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. முந்தைய இரு படங்களை விட, பிரமாண்ட  பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து