முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் கொரோனா 3-வது அலை: தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      ஆன்மிகம்
Image Unavailable

கொரோனா 3-வது அலை பரவலையொட்டி திருப்பதியில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,787 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  கொரோனாவால் இதுவரை 19 லட்சத்து 62 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு 19,27,438 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில், மருத்துவமனைகளில் 21, 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மொத்தம் கொரோனா 2-வது அலைக்கு இதுவரை 13,332 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் திருப்பதியில் கொரோனா 3-வது அலை அச்சம் ஏற்பட்டுள்ளது. திருப்பதி மாநகராட்சி ஆணையாளர் கிரிஷா வார்டுகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது கூறிய அவர்,  கொரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.  ஏற்கனவே திருப்பதி கோவிலில் கொரோனா 3-வது அலை அச்சத்தை கருத்தில் கொண்டு இலவச தரிசனம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து