முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் 8-வது நாள்: பதக்க பட்டியலில் சீனா முதலிடம்

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

ஒலிம்பிக் போட்டியின் 8 வது நாளில் சீனா தங்கம் 18 தங்க பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் சீனா 4 தங்கம் வென்று உள்ளது.

ஜப்பான் முதலிடம்...

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி  அமெரிக்க பதக்கபட்டியலில்  மீண்டும் முன்னிலை பெற்று இருந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி போட்டியை நடத்தும் ஜப்பான் மீண்டும் முதலிடம் பிடித்தது. 

அமெரிக்கா 3-வது...

நேற்று ஒலிம்பிக் போட்டியின் 8 வது நாளில் சீனா தங்கம் 18 தங்க பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் சீனா 4 தங்கம் வென்று உள்ளது. நேற்று மாலை 6 மனி நிலவரப்படி  சீனா 18 தங்கம் , 9 வெள்ளி, 11 வெண்கலம், என மொத்தம் 38 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், ஜப்பான் 17 தங்கம்,  4 வெள்ளி , 7 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், அமெரிக்கா 14 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

51-வது இடத்தில்...

தொடர்ந்து ரஷியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,தென் கொரியா, நெதர்லாந்து,பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் உள்ளன. இந்தியா 51 வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து