திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் வர 5 நாட்களுக்கு தடை விதிப்பு

Thiruthani-Murugan 2021 07

Source: provided

திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு வர 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.  இந்த கோவிலில் பரணி மற்றும் ஆடிக்கிருத்திகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.  

தற்போது கொரோனா ஊடரங்கு அமலில் உள்ளதால் அதிகளவில் மக்கள் கூடினால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவிலில் நடக்கும் விழாக்கள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை மலைக்கோவிலில் நடைபெறும் தெப்ப உற்சவத்தை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தெப்ப உற்சவத்தை மாலை 5 மணியளவில் யூ டியூப் உள்ளிட்டவற்றில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து