முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மேட்டூர் அணையில் இருந்து இன்று 1.08.2021 முதல் 15.12.2021 வரை தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

மேட்டூர் அணையிலிருந்து, மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாய் பாசனப்பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்கள் மற்றும் மேற்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து 1.08.2021 முதல் 15.12.2021 வரை தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. 

இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு பொதுப்பணித்துறை அரசு  கூடுதல் தலைமைச் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் அவர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுள்ள பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக 01.08.2021 முதல் 15.12.2021  வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து