பெண்கள் ஹாக்கி கடைசி லீக் போட்டி: கட்டாரியா ஹாட்ரிக் கோலால் 'இந்திய அணி' அபார வெற்றி

Vandana-Katariya 2021 07 31

வாழ்வா? சாவா? என்ற போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நேற்று தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் இங்கிலாந்திடம் 2-0 என்ற கணக்கில் ஐயர்லாந்து தோல்வியை தழுவியதால் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

தென்ஆப்பிரிக்காவை... 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான நேற்று நடந்த ஏ பிரிவு மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இதில், இந்திய மகளிர் ஆக்கி அணி தென்ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

முதல் 3 லீக் போட்டி...

இந்திய பெண்கள் ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரட்டன், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் இடம் பிடித்துள்ளன. நெதர்லாந்துக்கு எதிராக 1-5, ஜெர்மனிக்கு எதிராக 0-2, கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 1-4 என வரிசையாக படுதோல்வியடைந்தது. 4-வது லீக்கில் அயர்லாந்தை 1-0 என வீழ்த்தி காலிறுதி வாய்ப்புக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. 

கட்டாரியா அபாரம்...

இந்த நிலையில் நேற்று தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா முதல் கோல் அடித்தார். முதல் கால் பகுதியின் ஆட்ட முடிவின் கடைசி நிமிடத்தில் தென்ஆப்பிரிக்கா பதில் கோல் அடித்தது. இதனால்  முதல் கால் பகுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றன.

2-2 சமநிலையில்...

2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீராங்கனை கட்டாரியா 17-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் நேரத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஹன்டர் கோல் அடித்தார். இதனால் 2-வது கால் பகுதி ஆட்டம் முடிவில் 2-2 என சமநிலை பெற்றன.

அடுத்தடுத்து கோல்...

3-வது காலிறுதி நேரத்தில் இந்தியா 32-வது நிமிடத்திலும் (நேஹா), தென்ஆப்பிரிக்கா 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தன. 4-வது கால்பகுதி ஆட்டத்தில் இந்தியாவின் கட்டாரியா 49-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளால் அதற்கு பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய பெண்கள் அணி 4-3 என வெற்றி பெற்றது.

சமஅளவில்... 

அயர்லாந்து அணியுடன் புள்ளிகள் கணக்கில் இந்தியா சமஅளவில் உள்ளது.  இதனை தொடர்ந்து ஏ பிரிவில், தென்ஆப்பிரிக்க குடியரசு அணிக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் இந்தியா நேற்று விளையாடி வெற்றி பெற்றது. ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா பெறும் 2-வது வெற்றியாகும் இது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பு பிரகாசமாகியது. இதற்கிடையே மற்றொரு லீக் போட்டியில் ஐயர்லாந்து அணி இங்கிலாந்திடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதால் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து