முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் வட்டு எறிதல்: இறுதி போட்டிக்கு கமல்பிரீத் தகுதி

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் இறுதி போட்டிக்கு கமல்பிரீத் கவுர் தகுதி பெற்றுள்ளார்.

2-வது இடம்...

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.  தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான வட்டு எறிதல் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் சிறப்பாக செயல்பட்டார். அவர் 64 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து 2-வது இடம் பிடித்து அசத்தினார்.

இறுதிச்சுற்றுக்கு... 

66 மீட்டருக்கு மேல் வட்டு எறிந்தால் தானாகவே இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். இவர் 64 மீட்டர் தூரம் எறிந்து முதல் 12 இடங்களுக்குள் நுழைந்து இறுதிச்சுற்று வாய்ப்பை பெற்றுள்ளார். மற்றொரு வீராங்கனை சீமா புனியா 60.57 மீட்டர் தூரம் வரை எறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து