முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதி: அர்ஜெண்டினாவிடம் போராடி தோற்றது இந்திய மகளிர் அணி டோக்கியோ, ஆக. 05- டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜெண்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. முதல் முறையாக... இந்திய மகளிர் ஹா

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதி:  அர்ஜெண்டினாவிடம் போராடி தோற்றது இந்திய மகளிர் அணி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜெண்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

முதல் முறையாக... 

இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது காலிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

ஆரம்பம் அசத்தல்...

இதையடுத்து நேற்று நடைபெற்றஅர்ஜெண்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 2-வது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தியது இந்திய மகளிர் அணி. பெனால்டி கார்னரில் குர்ஜித் கெளர் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பகுதியில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

ஆட்டம் சமன்...

2-வது பகுதியின் தொடக்கத்தில் பெனால்டி கார்னர் மூலமாக அர்ஜெண்டினா கோலடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.  முதல் பாதியின் இறுதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனில் உள்ளன. இதனால் ஆட்டத்தின் அடுத்த இரு பகுதிகளும் பரபரப்பாக இருந்தது.

இறுதிக்கு முன்னேற்றம்...

இதனை அடுத்து நடந்த 3-வது கால் பாதியில் 1-1 என்ற நிலையில் சமமாகவே நீடித்தது. 4-வது கால் பகுதியில் அர்ஜெண்டினா மேலும் ஒரு கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது. பின் ஆட்டத்தின் கடைசி வரை கோல் அடிக்க முயன்ற இந்திய அணியின் முயற்சிகள் பலிக்கவில்லை. இதை அடுத்து ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா வெற்றிப் பெற்று இறுதிக்கு முன்னேறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து