முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிரிகளின் பற்களை உடைக்கும் வேலையை தேர்வு செய்தது ஏன்? பல் டாக்டரிடம் பிரதமர் நகைச்சுவை கேள்வி

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

பல் வலிக்கு மருத்துவம் பார்த்த நீங்கள் எதற்காக எதிரிகளின் பற்களை உடைக்கும் வேலையைத் தேர்வு செய்தீர்கள் என்று டாக்டராக இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறியவரிடம் பிரதமர் கேள்வி எழுப்பினார். 

பஞ்சாப்பை சேர்ந்த டாக்டர் நவ்ஜோத் சிமி பல் மருத்துவராக இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறி உள்ளார்.  டாக்டர் நவ்ஜோத் சிமி கடந்த வாரம் பிரதமர் மோடியுடன் தனது கதையைப் பகிர்ந்து கொண்டார், பிரதமர் மோடியுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய போது, அவரைப் பாராட்டிய பிரதமர் மோடி தமது கேள்வியால் கலகலப்பை ஏற்படுத்தினார்.

வார்த்தைகளில் விளையாடும் திறனைப் பயன்படுத்தி, பிரதமர் மோடி இந்தியில் அவரிடம் பல் வலிக்கு மருத்துவம் பார்த்த நீங்கள் எதற்காக எதிரிகளின் பற்களை உடைக்கும் வேலையைத் தேர்வு செய்தீர்கள் என்று பிரதமர் கேட்டவுடன் சிமி புன்னகையுடன் பதிலளித்தார்.  புத்திசாலித்தனமாக மக்களின் வலியைத் தீர்க்கும் பணி காவல்துறை பணி என்பதால் தேர்வு செய்ததாகக் கூறினார்.

நான் நீண்ட காலமாக சிவில் சர்வீசஸில் வேலை செய்கிறேன். ஒரு மருத்துவரின் பணி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியின் கடமை மக்களின் வலியைப் போக்க வேண்டும், எனவே இது சேவையில் பணியாற்ற ஒரு பெரிய தளம் என்று நான் நினைத்தேன் என்றும் கூறினார். 

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி-போலீஸ் பயிற்சி நிறுவனத்தில் தகுதி பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கடந்தவாரம் உரையாடியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து