இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று

corona-india 2021 08 05

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது.  இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 982 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,18,12,114 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 533 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,290 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 41,726 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,74,748 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,11,076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.32 சதவீதமாக  உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியே 93 லட்சத்து 42 ஆயிரத்து 295 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து