அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு 5 கட்ட தேர்தல்: அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு

admk-head-office-2021 08 05

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-  

அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழக  அரசு போக்குவரத்து கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக வருகிற 14-ம் தேதி. 22-ம் தேதி. 29-ம் தேதி, அடுத்த மாதம் 7-ம் தேதி மற்றும் 17-ம் தேதி ஆகிய நாட்கள் நடைபெறும். இதற்கான கால அட்டவணை வெளியிடப்படுகிறது. 

அதே போல் மண்டலங்கள் மற்றும் பணிமனைகளில் தேர்தல்களை நடத்துவதற்காக, தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பணிமனைகளின் தேர்தல் ஆணையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  எனவே அண்ணா தொழிற்சங்கங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை முறைப்படி நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து