ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

President-Modi 2021-08-05

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது. 

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.  ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஹாக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும்.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய ஆடவர் ஹாக்கி அணி பெற்ற வெற்றி ஹாக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய அணியின் வெற்றி உந்து சக்தியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

வரலாறு! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த நாட்டின்  குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர்.  எங்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து