முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஹாக்கி அணியின் சாதனையால் நாடு பெருமை கொள்கிறது: பட்நாயக்

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

இந்திய ஹாக்கி அணியின் சாதனையால் நாடு முழுவதும் பெருமை கொள்கிறது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியிடம் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு அவர் கூறுகையில்,

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் சாதனையால் நாடு முழுவதும் பெருமை கொள்கிறது. கடந்த சில நாட்களில், ஹாக்கி உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் ஒன்றிணைத்துள்ளது. இந்திய அணியின் இந்த செயல்திறன் பலரை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து