முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: வழக்கை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன் முதன் முதலாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்..? பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பத்திரிக்கை செய்திகளின் தன்மையை ஆராய்ந்தே பிறகே விசாரணைக்குள் செல்ல முடியும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை, பெகாசிஸ் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. அதை தற்பொழுது ஏன் அவசர அவசரமாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர்.

2019 முதல் உளவு பார்க்கப்பட்டாலும் அதுகுறித்த விவரம் தற்போது தான் வெளியாகி உள்ளது. அதனால் தான் இத்தனை நாட்களாக யாரும் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நமக்கு தெரியாமலேயே நம் வாழ்க்கையில் நடக்கும் விஷங்களை உளவு பார்க்கக்கூடியது பெகாசஸ். தொழில் நுட்பம் மூலம் தனிநபர் ரகசியத்தை வேவு பார்ப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கபில்சிபில் கூறினார்.

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பான ரிட் மனுக்கள் தொடர்பாக அனைத்து மனுதாரர்களும் தங்கள் மனு நகலை மத்திய அரசுக்கு வழங்குமாறு சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு (10-ம் தேதிக்கு) செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து