ஹாக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ. ஒரு கோடி பரிசு: பஞ்சாப் அரசு அறிவிப்பு

indian-hockey-2021-08-05

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ. ஒரு கோடி பரிசை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில்   ஆண்கள் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை தோற்கடித்து பதக்கம் வென்றது இந்தியா.  41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ரூ. ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது.  அணியில் இடம்பெற்று இருந்த கேப்டன் மந்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் சிங், ஹர்திக் சிங், ஜாம்ஷெட் சிங், தில் பிரித் சிங், குர்ஜந்த் சிங், மந்தீப் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு தலா ரூ. ஒரு கோடி பரிசை அறிவித்துள்ளது பஞ்சாப் மாநில  அரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து