பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் பிரசாந்த் கிஷோர்

Prasanth-Kishore-2021 08 05

பஞ்சாப் மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் பதவியை பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. முதல்வர் அம்ரிந்தர்சிங் மற்றும்  சித்துவுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. அடுத்த ஆண்டில் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய நெருக்கடிக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், பொதுவாழ்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும், அடுத்தகட்டம் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து