பெகாசஸ் பிரச்சினை குறித்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை

Madurai-school

Source: provided

புது டெல்லி: பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.

பாராளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வரும் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 13-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த 5 நாள்கள் பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து