முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலியை காரின் மேல் கட்டி வைத்து ஓட்டிச் சென்ற காதலன் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ: தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறு கொண்டு கட்டி வைத்து கொண்டு ரோட்டில் கார் ஓட்டி சென்று உள்ளார் காதலன். 

ரஷியாவைச் சேர்ந்த செர்ஜி கோசென்கோ இவர் சமூக ஊடக பிரபலம்.  தனது காதலியுடன்  இணைந்து பலவேறு வித்தியாசமான புகைப்படங்கள் , வீடியோக்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம்.  இவர் சமீபத்தில் தனது காதலியுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

குறிப்பாக, சமூக வலைத்தளத்தில் கிட்டதட்ட அவருக்கு 50 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இந்த வீடியோவை “Trust Test” என்று குறிப்பிட்டு, இந்த வீடியோவை தன்னுடைய சமூக ஊடகத்தின் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறு கொண்டு கட்டி வைத்து கொண்டு ரோட்டில் கார் ஓட்டி சென்று உள்ளார். இருவரும் கைகளில் விலங்கு மாட்டி உள்ளனர். 

இந்த வீடியோவானது, பலரது கவனத்தையும் பெற்றுள்ள நிலையில், பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

 ஒருவர் "உண்மையைச் சொல்வதானால், இதில் என்ன வேடிக்கை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எல்லோரும் அதை அனுபவித்து பார்க்கிறார்கள்.  இது உங்கள் சொந்த குழந்தைகளுக்கு நீங்கள் வைத்த முன்மாதிரியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், இந்த வீடியோ அந்நாட்டின் போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இந்த வீடியோவைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபரை கண்டுபிடித்து, சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.760  அபராதம் விதித்தனர்.

முக்கியமாக, அந்நாட்டின் சிறுவர் சிறுமிகளுக்கு இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும், அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து