முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் கீர் பவானி துர்கா கோவிலில் ராகுல் வழிபாடு

செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவிலில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். அத்துடன் ஹஸ்ரத்பல் தர்காவிலும் பிரார்த்தனை செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகள் திருமணம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.  காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு ராகுல் முதல்முறையாக அங்கு சென்றுள்ளார். காஷ்மீர் மாநிலம் கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவிலில் நேற்று அவர் வழிபாடு நடத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் சென்றிருந்தனர். பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பல் தர்காவிலும் அவர் பிரார்த்தனை செய்தார்.

காஷ்மீரில் இரண்டு நாள் பயணத்தின்போது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை ராகுல் காந்தி திறந்து வைத்து தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.  

ஸ்ரீநகரில் நடந்த தொண்டர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,  டெல்லிக்கு புலம் பெயரும் முன்பு எங்கள் குடும்பம் அலகாபாத்தில் வாழ்ந்தது. அதற்கு முன்பு எங்கள் முன்னோர்கள் காஷ்மீரில் வாழ்ந்தனர். அதனால் காஷ்மீருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  ஜம்மு காஷ்மீர் மக்களின் அன்பையும், உறவையும் விரும்புகிறேன். எங்கள் குடும்பம் காஷ்மீரின் ஜீலம் தண்ணீரை குடித்து வளர்ந்தது. உங்கள் பழக்க வழக்கங்கள், உங்கள் சிந்தனை, உங்கள் செயல்பாடு காஷ்மீரீகள் என பெருமையுடன் வெளிப்படுத்துகின்றன. அது என்னுள்ளும் உள்ளது.

காஷ்மீர் மக்கள் வலியையும் துன்பத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மக்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது. இதனை எதிர்த்து ஜனநாயக சக்திகள் தொடர்ந்து போராட வேண்டும். ஜம்மு - காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இது தான் எங்கள் கோரிக்கை. காஷ்மீரில் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து