இந்தியா - வங்கதேசம் இடையே 22-ம் தேதி முதல் விமான சேவை

Airport 2020 08 18

Source: provided

புது டெல்லி: இந்தியா-வங்கதேசம் இடையே வரும் 22-ம்  தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வங்கதேசம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில், அடுத்த வாரம் முதல் இந்தியாவிற்கு 12 விமானங்களை இயக்கவுள்ளதாக வங்கதேச விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இரு நாடுகளுக்கு இடையே படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், வங்காளதேசத்திலிருந்து டெல்லி, கொல்கத்தா, சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து