பணமோசடி வழக்கு: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் தாயார் அமலாக்க துறையில் ஆஜர்

mom-ex-cm

Source: provided

ஜம்மு: பணமோசடி வழக்கு தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் தாயார் குல்ஷான் நஸீர் அமலாக்கத் துறை முன் நேற்று ஆஜரானார். 

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மெஹபூபா முப்தியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு இரண்டு நாட்குறிப்புகளைப் பறிமுதல் செய்தது.   அந்த நாட்குறிப்புகளில் முதல்வராக மெஹபூபா முப்தி பதவி வகித்த போது பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு முதல்வர் நிதியிலிருந்து முறைகேடாக பணம் அனுப்பப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் குல்ஷான் நஸீரின் வங்கிக் கணக்குகளுக்கும் லட்சக்கணக்கான ரூபாய் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

இதுதொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு குல்ஷான் நஸீருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.  இதன் அடிப்படையில் ஸ்ரீநகரிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் குல்ஷான் நசீர் நேற்று ஆஜரானார். கடந்த ஜூலை 14-ம் தேதி விசாரணை நடத்த குல்ஷான் நஸீருக்கு அமலாக்கத் துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து