மனைவியை விவாகரத்து செய்தாலும் குழந்தைகளை தந்தை பராமரிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Supreme-Court 2021 07 19

Source: provided

புது டெல்லி: மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் குழந்தைகளை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்த கணவர் தன் மனைவி மறறும் இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு 4 கோடி ரூபாய் வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கணவர் பணத்தை தரவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனைவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சந்திரசூட் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், விவாகரத்து செய்யும் போது குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் என் கட்சிகாரர் நிறைவேற்றியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக அவரது வியாபாரம் மந்தமாகி விட்டது. அவரால் 4 கோடி ரூபாயை தர முடியுவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:-

மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது. குழந்தைகளை பெற்றவர் என்ற முறையில் அவர்களை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உண்டு. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட 4 கோடி ரூபாயை மனைவியிடம் வழங்க முடியாததற்கு நிதி நெருக்கடி காரணங்களை ஏற்க முடியாது. அதனால் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாயையும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 3 கோடி ரூபாயையும் விவாகரத்து செய்த மனைவியிடம் வழங்க கணவருக்கு உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து