முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமர் மோடி சிலையை அகற்றிய பா.ஜ.க. தொண்டர்

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புனே : மகராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை வைத்து கோயில் எழுப்பிய பா.ஜ.க. தொண்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்தச் சிலை அகற்றப்பட்டது.

புனே நகரைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி மயூர் முன்டே. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், அனுத் பகுதியில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை வைத்துக் கோயில் எழுப்பினார். அந்தக் கோயிலில் சென்று மயூர் முன்டே வழிபாடும் செய்யத் தொடங்கினார், இதைப் பார்த்த பா.ஜ.க. தொண்டர்கள் பலரும் மோடியின் சிலையை வழிபடத் தொடங்கினர்.

மயூர் முன்டேயின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் தரப்பிலும், ஆளும் பா.ஜ.க. தரப்பிலும் உருவாக்கியது. மாநிலத்தில் ஆளும் சிவசேனா, என்.சி.பி. கட்சிகள் சிலையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தும் அளவுக்கு வந்து விட்டன. இந்தச் செயல்பாடுகள் பா.ஜ.க. டெல்லி தலைமை வரை சென்று கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பா.ஜ.க.வின் கொள்கைக்கு முரணாக மயூர் செயல்பட்டு வருகிறார் என்று மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பா.ஜ.க. நிர்வாகி மயூர் முன்டே நிருபர்களிடம் கூறுகையில், 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி முயற்சி எடுத்துள்ளார். அவரின் சேவைக்கு நன்றி செலுத்தவே இந்தக் கோயிலை எழுப்பினேன்.  இந்தக் கோயில் கட்டுவதற்காக ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து சிவப்பு மார்பில் கற்களை வாங்கினேன். ஒட்டுமொத்தமாகக் கோயில் எழுப்ப ரூ.1.60 லட்சம் செலவானது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து