இந்தியாவில் 5-வது தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு

Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : 3 டோஸ் கொண்ட சைகோவ்- டி தடுப்பூசிக்கு மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

 கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதே போல் மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

தற்போது கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் 5-வது தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.   ஜைடஸ் காடில்லா என்ற நிறுவனம் வடிவமைத்த சைகோவ் டி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது அங்கீகாரம் பெறும் உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசியாகும்.   3 டோஸ் கொண்ட சைகோவ்- டி தடுப்பூசிக்கு மத்திய  அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு  துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அகமதாபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனம் ஜூலை 1-ம் தேதி தனது சைகோவ்- டி  தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்தது. இந்த தடுப்பூசி 66.6 சதவீதம்  செயல் திறன் கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து