முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்: சபரிமலை, குருவாயூர் கோவில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் அனுமதி

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

கேரளாவில் நேற்று ஓணப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சபரிமலை குருவாயூர், பத்மநாபசுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 

கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நேற்று  கொண்டாடப்பட்டது.  கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இவ்வருடம் ஓணம் களையிழந்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் புத்தாடைகள், பூக்கள் மற்றும் பொருட்கள் வாங்க திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்பட நகர் பகுதிகளில் மட்டும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராம புறங்களில் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று பெரும்பாலான வீடுகளில் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. வழக்கமாக பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரிய அத்தப்பூ கோலங்கள் போடப்படுவது உண்டு. ஆனால் இந்த வருடம் எங்கேயும் போடப்படவில்லை. வீடுகளில் மட்டுமே ஓணம் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டதே இதற்கு காரணமாகும். இந்தநிலையில் நேற்று ஓண பண்டிகையையொட்டி சபரிமலை, குருவாயூர் மற்றும் பத்மநாபசுவாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சபரிமலை கோயிலில் மட்டுமே 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில் உள்பட பிற கோவில்களில் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஒரே நேரத்தில் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து